விழுப்புரத்தில் ரூ.5 கோடி! பொள்ளாட்சியில் ரூ.1 கோடி! பக்ரீத் பண்டிகை - விற்பனையான ஆடுகள்!
pollachi market1crore goats sales
தமிழகத்திலேயே பொள்ளாச்சி மாட்டுச்சந்தை தான் மிகப்பெரிய கால்நடை சந்தையாக உள்ளது. இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும். இந்த சந்தைக்கு பொள்ளாச்சி மட்டும் இல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து ஆடுகளையும் மாடுகளும் வாங்கிச்செல்வார்கள்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் சந்தை கூடியது, வருகின்ற 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை எனபதால், தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெள்ளாடு, செம்மறி ஆடுகளை திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது.
ஆடுகளை வாங்குவதற்க்காக ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொதுமக்களும், வியாபாரிகளும் சந்தைக்கு வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளின் எடைக்கு ஏற்ப ஆடுகளின் விலை உயர்ந்து விறபனையானது.
இது குறித்து ஆடு வியாபாரிகள் தெரிவிக்கையில், பண்டிகை வருவதால் ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விறக்கப்ட்டது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் ரூ.1 கோடிக்கும் மேலாக ஆடுகளை விற்பனையானது என தெரிவித்தனர்.
இதே போல, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வார சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை தொடங்கி உள்ளது. இந்த சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் தங்களது ஆடுகளை விற்பனைக்காக கொண்டுவந்தனர். அதிகாலை முதல் தற்போது வரை சுமார் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன.
English Summary
pollachi market1crore goats sales