பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்.. விவசாய சங்க கூட்டமைப்பு நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


சென்னையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இது விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் இருக்கும் பகுதியில் அமைக்கப்பட இருப்பதால், இதற்கு அவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

பரந்தூர் அருகே உள்ள ஏகனாபுர கிராம மக்கள் இந்த விமான நிலையத்திற்கு தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பள்ளி மாணவ, மாணவிகள் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இத்தகைய சூழலில் இன்று விவசாய கூட்டமைப்பு சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்ள மாநில விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பி ஆர் பாண்டியன் செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்கு வந்தபோது அங்கே போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

அத்துடன் அவர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pr pandiyan arrested in chengalpattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->