"உதயநிதி வயதிற்கு சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்" - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சென்னை வியாசர்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது:- ‘’ நிர்மலா சீதாராமன் பேசியது அநாகரீகமாக எனக்கு தெரியவில்லை. உதயநிதி பேசியதற்குதான் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இன்றைக்கு முக்கிய பொறுப்பில் உள்ளார். ஒரு வார்த்தையை பேசுவதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். வாயை விட்டு வார்த்தை வந்துவிட்டால் அது நமக்கு எஜமான் ஆகிவிடும். உதயநிதி வயதிற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தை சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. அதனால் தான் அனைவரும் கண்டிக்கும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்தும் கலைஞர் பேரில் தான் இருக்கிறது. ஆனால் எல்லாம் மக்கள் வரிப்பணம், அதனால் பொறுப்பில்லாமல் பேசக்கூடாது.

தூத்துக்குடி, நெல்லையில் மழையால் பாதித்த மக்களை சந்தித்தேன்.எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம். தூத்துக்குடியில் அதிக கிறிஸ்துவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இது கருப்பு கிறிஸ்துமஸ்தான். அந்த அளவிற்கு தூத்துக்குடி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் எல்லா பணிகளும் முடிந்ததாக தலைமைச் செயலாளர் சொல்கிறார்.

அது வருத்ததிற்குரிய விஷயம். ஸ்ரீவைகுண்டம் பகுதியை இன்றைக்கும் தொடர்புகொள்ள முடியவில்லை. களத்தில் ஆளும் கட்சியை நான் எங்கேயும் பார்க்கவில்லை. வாக்கு வாங்குவது மட்டும் ஆளும் கட்சியின் வேலை இல்லை. மழை வெள்ளத்தில் எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha vijayakant comment to udhayanithi speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->