மழையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை - பிரேமலதா விஜயகாந்த்..! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த பகுதி வலுவிழந்ததனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் அதிகளவில் நீர் நிரம்பி வருகிறது. மேலும், மக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

காற்றழுத்த தாழ்வு பகுதியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை நேற்றிலிருந்து பெய்து கொண்டிருக்கிறது. இந்தக் கனமழையின் காரணமாக அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்து மக்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.

அது மட்டுமல்லாமல் தாமிரபரணி ஆற்றிலும், குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு உடனடியாக மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தங்குமிடம், உணவு, மருந்து மாத்திரை பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர், உடுத்த உடை ஆகியவற்றை வழங்கி உரிய பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.

தண்ணீர் தேங்கி இருக்கின்ற அனைத்து இடங்களும் ராட்சத குழாய் வைத்து தண்ணீரை அகற்ற வேண்டும். எவ்வளவு பெரிய மழை வந்தாலும் நாங்கள் சமாளிப்போம் என்று வெறுமன பேச்சில் இல்லாமல் செயலில் ஈடுபட்டு தென் மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் மக்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசினுடைய கடமையாகும்.

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளையும், பாதுகாப்பையும் கொடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இந்த அரசு நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha vijayakant says peoples rescue govt duty


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->