உங்க இலவச அட்வைஸ்க்கு நன்றி - ஆவேசத்தின் உச்சியில் பிரேமலதா விஜயகாந்த்.!
premalatha vijayakant speech about director pandiraj post
அண்மையில் சென்னை திருவேற்காட்டில், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார்.
அப்போது, மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் நாற்காலியில் இருந்து சரிந்து விழப்போன நிலையில், அவரை தேமுதிக தொண்டர்கள் தாங்கிப் பிடித்தனர். இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலானது.
இந்த வீடியோவைப் பார்த்து மனம் வருந்திய இயக்குநர் பாண்டிராஜ், “கேப்டன் விஜய்காந்த் அவர்களுக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும் வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ். பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என்று பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, "மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ ஒரு பதிவு போடணும் என்பதற்காக பதிவிடாதீர்கள்.
இது சினிமா கிடையாது, கட்சி. எங்களுக்குத் தெரியும் அவரை எப்படி பாத்துக்கணும் என்று. உங்க அறிவுரைக்கும், இலவச அட்வைஸூக்கும் நன்றி மிஸ்டர் பாண்டிராஜ்” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
English Summary
premalatha vijayakant speech about director pandiraj post