என் மகனுக்காக பரப்புரை செய்ய போகிறேன் - பிரேமலதா விஜயகாந்த்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் V.T. நாராயணசாமியை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "பெரியகுளம் பகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகளான மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை, திண்டுக்கல் சபரிமலை அகல ரயில் பாதை திட்டம், பெரியகுளம் நகரின் முக்கிய ஆதாரமாக விளங்கும் பேரிச்சம் ஏரியிலிருந்து நீர் அதிகம் எடுப்பதற்கான திட்டம், பெரியகுளம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராதது குறித்த பிரச்சனை உள்ளிட்ட அனைத்தும் தீர்க்கப்படும்.

அதிமுகவிலிருந்து பலர் பிரிந்து சென்றாலும் இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள்தான் உண்மையான அதிமுகவினர். 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் தேமுதிக சார்பில் போட்டியிடும் அனைவரும் என் பிள்ளைகள். நாளை முதல் என் மகன் விஜய பிரபாகரனுக்காகப் பரப்புரை மேற்கொள்ளப்போகிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha vijayakant start election campaighn for vijaya prabakaran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->