#BREAKING:: திடீர் திருப்பம்... குடியரசு தலைவரின் குன்னூர் பயணம் ரத்து..!!
President Droupadi Murmu visit to Coonoor was cancelled
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு திரௌபதி முர்மு முதன்முறையாக தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்த அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் விமான மூலம் நேற்று மாலை கோவைக்கு சென்ற அவர் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.
அவரை சத்குரு வரவேற்று ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார். பின்னர் தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின்னர் தியான பீடத்தில் வழிபாடு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆதியோகி சிவன் சிலை முன்பு கோலங்காலமாக நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார். அவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்று போர் நினைவு சின்னத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் நிலவுவதால் ஹெலிகாப்டரில் செல்ல முடியாத சூழல் இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று நண்பகல் 12 மணி அளவில் கோவை விமான நிலையத்திலிருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
English Summary
President Droupadi Murmu visit to Coonoor was cancelled