அரசு பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு ரொக்கப்பரிசு.!  - Seithipunal
Seithipunal


அரசு பேருந்துகளில் பயணம் செய்த 13 பேருக்கு தமிழக அரசு சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆகஸ்டு மாதத்திற்கான கணினி குலுக்கல் முறையில் பதின்மூன்று பயணிகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், தேர்வு செய்தார்.

அதில், மூன்று பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள 13 பயணிகளுக்கும் விரைவில் பரிசுகள் வழங்கப்படும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

price to govt bus trave passangers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->