தமிழகத்துக்கு பிரதமர் மோடியின் உதவித்தொகை ரூ.471 கோடி விடுவிப்பு..!
Prime Minister Modi releases Rs 471 crore in aid to Tamil Nadu farmers
தமிழக விவசாயிகளுக்கு, 471 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, சாகுபடி நேரத்தில் உதவும் வகையில், பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டம், 'பி.எம்.கிஸான்' என்ற பெயரில் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், குறித்த உதவி தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், மூன்று தவணைகளாக, தலா 2,000 ரூபாய் வீதம், ஆண்டுதோறும் 6,000 ரூபாய், விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், 19-வது தவணை நிதியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார். அத்துடன், நாடு முழுதும் உள்ள 9.80 கோடி விவசாயிகளுக்கு, 22,000 கோடி ரூபாய், நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 22.5 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில், 471 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Prime Minister Modi releases Rs 471 crore in aid to Tamil Nadu farmers