பயணிகளை ஏற்றிய ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் - தனியார் பேருந்து ஊழியர்கள் கைது.!
private bus employees arrested for attack auto driver
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் வடகிமனா பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல் அல்தீப், நேற்று வடகிமனா பேருந்து நிலையத்தில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பேருந்து ஊழியர்கள் மூன்று பேர், அப்துல் அல்தீப்பின் ஆட்டோவை துரத்தி சென்று வழிமறித்தனர்.
இதனால், ஆட்டோவில் இருந்து கீழே இறங்கிய அப்துலை பேருந்து ஊழியர்கள் மூன்று பேரும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அப்துல் தனது ஆட்டோவிலேயே மலப்புரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்கு நடந்துச் சென்றார்.
அப்போது நிலைகுலைந்த அப்துல் சுருண்டு கீழே விழுந்தார். இதைப்பார்த்த மருத்துவ ஊழியர்கள், அப்துலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அப்துல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
உடனே மருத்துவமனை ஊழியர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய தனியார் பேருந்து ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
private bus employees arrested for attack auto driver