பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த சிறுமி - அதிரடி காட்டிய போக்குவரத்து அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடந்த நவம்பர் 28ம் தேதி 4 வயது சிறுமி லயா, பள்ளி பேருந்து மோதியதில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தியதில், உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டுநர் தியாகராஜன் என்பவர் வாகனத்தை, செல்போனில் பேசியபடி அஜாக்கிரதையாக இயக்கியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் தியாகராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, உரிய அனுமதியின்றி நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

அதன் படி, போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெச்.ஆர்.எம் மெமோரியல் மெட்ரிக் பள்ளி என்ற பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று அந்த வழியாக வந்தது. 

அதனை நிறுத்தி போக்குவரத்து போலீசார் சோதனையிட்டபோது, உரிய தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கப்படாமல் அந்த வாகனம் இயக்கப்பட்டதும் வாகனத்தின் பக்கவாட்டு விளக்கும் உடைந்து இருந்ததும் தெரியவந்தது. உடனே போக்குவரத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private school bus seized in nilgri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->