#மதுரை || மாணவிக்கு பாலியல் தொந்தரவு - கல்லூரி பேராசிரியர் கைது
Professor arrested for sexually harassing a college girl in madurai
மதுரை மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக மதுரையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து நீதிபதி இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மதுரை சரக டிஐஜிக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து செக்கானூரணி போலீசார், விசாரணை நடத்தியதில் மாணவிக்கு கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் கருப்பையா (42) மற்றும் கல்லூரி மாணவி மாணவர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை கைது செய்தனர். மேலும் தலைமறைவான கல்லூரி மாணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Professor arrested for sexually harassing a college girl in madurai