பொய் வழக்கு போடப்பட்டதாக கூறி போராட்டம்... மீனவ இயக்கத்துக்கு நேரு MLA ஆதரவு!
Protest against false case Nehru MLA backs fishermens movement
மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் சார்பாக முதலியார் பேட்டை காவல் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்,
மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய செல்வா மீது காவல்துறையால் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியும், இவ் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் சார்பாக முதலியார் பேட்டை காவல் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்,அப்போது பேசிய நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்,மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்துபவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பேசினார் அதனை தொடர்ந்து போராட்டத்தில் மீனவர்கள் அமைப்பு தலைவர்கள்,தமிழர்களம் அழகர், பி போல்ட் அமைப்பு பஷீர்மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் ஏராளமானோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
English Summary
Protest against false case Nehru MLA backs fishermens movement