உடனடியாக 3 பேஸ் மின் வசதி வழங்க வேண்டும் ..மின்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட MLA !
Provide 3 phase power supply immediately. MLA complains to electricity officials!
உப்பளம் தொகுதி உடையார் தோட்டத்தில் 1பேஸ் இல் இருந்து 3 பேஸ் ஆக மின் வசதி மேம்பாட்டிற்கு ரூ.8.27 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் பூரணமாக நிறைவு பெறாத காரணத்தினால் ஏம்எல்ஏ அனிபால் கென்னடி நடவடிக்கை எடுக்க மின்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
உடையார் தோட்டப் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் மின் வெட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடியின் முன்னெடுப்பில் ரூ.8,27,249 மதிப்பீட்டில் புதிய 3ஃபேஸ் மின் இணைப்பு மற்றும் 12 புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கான பணிகள் துவக்கப்பட்டிருந்தாலும், இன்னும் பூரணமாக நிறைவு பெறாத காரணத்தினால் அந்தப் பகுதியில் அடிக்கடி மின்சாதன பொருட்கள் பழுதடையும் நிலை குறைவாக மின் அழுத்தத்தினால் காணப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடியிடம் நேரில் புகார் தெரிவித்தனர்.
உடனே உரிய நடவடிக்கை எடுத்த எம்எல்ஏ, மரப்பாலம் மின்துறை இளநிலை பொறியாளர் ரமேஷ் அவர்களை பொதுமக்களுடன் நேரில் அழைத்துச் சென்று, அவர்கள் எதிர்கொள்வது போன்ற மின்விநியோக சிக்கல்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, தற்போதைய கடும் வெயில் காலத்தில் மக்கள் இன்னும் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கேட்டுக்கொண்டார். 2 வாரத்திற்குல் சீர் செய்து தருவதாக மின்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர், உடன் கிளை செயலாளர் ராகேஷ், திமுக நிர்வாகிகள் சக்தி, முருகன், ரகுமான் உடன் இருந்தனர்.
English Summary
Provide 3 phase power supply immediately. MLA complains to electricity officials!