மூதாட்டிகளை கொன்று பிணத்துடன் உடலுறவு.. விழுப்புரத்தில் பகீர் சைக்கோ.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் கண்டப்பஞ்சாவடி பகுதியில் வசிக்கும் சரோஜா என்ற 80 வயது மூதாட்டி தனது மகள் பூங்காவனம் வீட்டில் வசித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த அனைவரும் பூங்காவனம் மற்றும் சரோஜாவை விட்டுவிட்டு கடைக்கு சென்றிருந்த நிலையில் மர்மநபர் ஒருவர் இதனை அறிந்து கொண்டு பூங்காவனம் மற்றும் சரோஜாவை அடித்துக் கொலை செய்து விட்டு அவர்களிடம் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இருவரையும் பிரேத பரிசோதனை செய்த பொழுது அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். இந்த விசாரணையில் நான்கு வருடங்களுக்கு முன்பு திருவெண்ணெய்நல்லூரில் ஒரு மூதாட்டி இதே போல கொல்லப்பட்ட இடத்தில் கண்டறியப்பட்ட கைரேகையும் இதுவும் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட கவிதாஸ் என்பவர் ஜேசிபி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரை கைது செய்து விசாரணை செய்ததில் தாய் மகள் இருவரையும் கவிதாஸ் அடித்து கொலை செய்து விட்டு அவர்களிடம் இருந்த 8 கிராம் நகையை கொள்ளையடித்து பின்னர் அவர்களுடன் பாலியல் வல்லுறவு கொண்டது தெரியவந்துள்ளது. 

மேலும், இது குறித்து அவர் அளித்த வாக்கு மூலத்தில் வயதான மூதாட்டிகளை நோட்டமிட்டு அவர்களை கொடூரமான முறையில் தாக்கி அவர்களிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு அவர்கள் மயக்க நிலையில் அல்லது இறந்த பின்னர் அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் குணம் உள்ளவர் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சிறை தண்டனை பெற்று வெளியில் வந்த அவர் மீண்டும் இதையே செய்துள்ளார். மது குடித்து விட்டால் அவருக்கு உடலுறவு எண்ணம் தோன்றுகிறது என்றும் அப்போது அதற்கு பலியாக மூதாட்டிகளை பயன்படுத்தி வருகிறார் என்பதும் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Psycho using old women to rape


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->