AI மூலம் "டீப் ஃபேக்".. ஆனால் சரி செய்யலாம் - அமைச்சர் பி.டி.ஆர் பேச்சு.!!
ptr says destruction caused by humans can corrected ai technologies
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு அரசின் முன்னாள் நீதித்துறை அமைச்சரும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் "கணினிகளை மனிதர்கள் போல செயல்படும் வகையில் வடிவமைக்க தற்போது தொடங்கி விட்டோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலைகளை உருவாக்கவும், பறிக்கவும் முடியும். இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் கண்டன்டுகளை உருவாக்கினால் அது வேலை வாய்ப்புகளை பெருக்கும்.
அதே வேளையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் "டீப் ஃபேக்" உள்ளிட்ட எதிர்மறை தாக்கங்கள் அதிகரித்துள்ள சூழலில் அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகத்தன்மை சரி பார்ப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். பல நாடுகளில் ஏஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் முறைகேடுகள் செய்வதை நம்மால் பார்க்க முடிகிறது. மனிதர்களால் ஏற்படும் அழிவு மற்றும் இழப்பை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி சரி செய்யலாம்" என தெரிவித்துள்ளார்
English Summary
ptr says destruction caused by humans can corrected ai technologies