பிப்ரவரி 1 முதல் கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி - சென்னை மாநகராட்சி...!
Public access to beaches from February 1
பிப்ரவரி ஒன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுள்ளது.
கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலால் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து, தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி வழகங்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், கடற்கரைக்கு செல்வோர் தனிமனித இடைவெளி, முக கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
English Summary
Public access to beaches from February 1