பரபரப்பு!...எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல்!...உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது உரையாற்றிய அவர்,  திமுக கூட்டணி உடையாதா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்றும்,  திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என்றும், அது வெற்றி கூட்டணி என்றும், மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி என்று பெருமிதம் கொண்டார்.

மேலும், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கூட்டணிக்கு சேர்பவர்கள் ரூ.200 கோடி கேட்கிறார்கள் என்றும், 20 சீட் கேட்கிறார்கள் என்று கூறியதாக கூறிய அவர்,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம்  1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைவதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தை  பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருவதாகவும், இதை பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதாலும் அவருக்கு வயிற்றெரிச்சல் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sensation edappadi palaniswami stomach upset udhayanidhi stalin attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->