பாஜகவை சிக்க வைக்க காங்கிரஸ் திட்டம்!...அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், தானி மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச புகார் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில், டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.  மேலும், நவம்பர் 26-ம் தேதி அரசியலமைப்பு தினத்தின் 75-வது ஆண்டு விழா நாடாளுமன்றத்தின் பழைய மைய மண்டபத்தில் கொண்டாடப்பட உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் இன்று காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூடியது. இதில், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அதானி மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச புகார் தொடர்பாக இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

மேலும், வட இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் ரயில் விபத்துகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த நிலையில்,  பாஜகவை சிக்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress plan to trap bjp congress urges to discuss adani issue in parliament


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->