மழைக்காலத்தில் கூட.. இரக்கம் இல்லையா? சாலையில் உருண்டு கதறி அழும் பெண்!! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயன்ற அரசு அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, எதிர்ப்பு தெரிவித்த பெண்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நீதிமன்றத்தின் உத்தரவின் படி தாம்பரம் இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் 1,000க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் சுமார் 700க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்களும், பொது மக்களும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை ஈடுபட்ட நிலையில் அவர்களின் ஒரு பெண் தரையில் உருண்டு புரண்டு கதறி அழுதார். ஒரு கட்டத்தில் அவர் மயங்கி விழுந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நீதிமன்ற உத்தரவு என்றாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக 700க்கும் மேற்பட்ட வீடுகளை மழை காலத்தில் இடிக்க அரசு அதிகாரிகள் முயல்வது மனிதாபிமானம் அற்ற, இரக்கமற்ற செயல் என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public protests to remove Adyar encroachments in Tambaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->