அடிப்படை வசதிகூட இல்லை - ராஜினாமா செய்வேன்! அதிரவைத்த திமுக கவுன்சிலர்!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை நகராட்சியின் 33-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன் தான் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த பதிவில், "எனது வார்டுக்குட்பட்ட நகர் உசிலங்குளம் அய்யனார் நகர் மூன்றாம் வீதி சாலை குண்டும், குழியுமாக உள்ளது. 

ஏற்கனவே இங்கு நகராட்சி சார்பில் தார் சாலை போட ஆரம்பித்து கைவிடப்பட்டது. நகராட்சி நிர்வாகம் தார் சாலை அமைக்குமா? என்று பொதுமக்கள் என்னை தினசரி கேள்வி கேட்கிறார்கள். 

அதேபோல் எனது வார்டு பகுதியில் மின்விளக்குகள் பழுது பார்க்க போன் செய்தால் வருகிறேன் என்று சொல்கிறார்கள் ஆனால் வருவதில்லை. 

நகராட்சி அதிகாரிகள் போனை எடுப்பதில்லை. துப்புரவு தொழிலாளர்களும் சரி வர வருவதில்லை. 

ஒரு நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பிரதிநிதியாக இருக்கும் நான் மக்கள் பணி செய்ய இயலாத காரணத்தால் இந்த பதவியில் நீடிப்பதில் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. 

எனக்கு மக்கள் பணி செய்ய ஆர்வம் இருந்தும் எந்த ஒரு நிர்வாகமும் ஒத்துழைப்பு தராத காரணத்தால் இன்னும் ஒரு வாரத்திற்குள் எனது வார்டு பகுதியில் ஏற்கனவே கொடுத்த கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நகராட்சி ஆணையரிடம் ராஜினாமா கடிதம் கொடுப்பது என முடிவு செய்துவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆளும் திமுகவின் கவுன்சிலர் ஒருவரே அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukottai DMK Councilor Social Media post


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->