மாணவர்களுக்கு குட் நியூஸ்...ஒரே ஜாலிதான்..காலாண்டு தேர்வு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
quarterly exam holiday date allounced by educational department
பள்ளிக்கல்வித்துறை பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது."எண்ணும் எழுத்தும்" என்ற திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்தாண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
quarterly exam holiday date allounced by educational department