பொது இடங்களில் வன்முறையில் ஈடுபட்டால்... - மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரயில்வே போலீஸ்.!
railway police warned 2 years jail to students for violence in public place
பொது இடங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே காவல் துறை டிஎஸ்பி ரமேஷ் எச்சரிகை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பொது இடங்கள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
படியில் தொங்கி செல்வது, செல்போனில் பேசிக்கொண்டு தண்டவாளத்தைக் கடப்பது, ரயில் பெட்டி மீது ஏறுவது, வந்துகொண்டிருக்கும் ரயில் முன்பு நின்று ‘செல்ஃபி’ எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக ரயில்களில் மற்றும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே மாணவர்கள் தேவையற்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
railway police warned 2 years jail to students for violence in public place