9 மாவட்ட மக்களே உஷார் - வானிலை மையம் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பருவமழைத் தொடங்கி பெய்து வருகிறது. இதற்கிடையே, தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்று வேக மாறுபாடு உள்ளிட்ட காரணங்களாலும் மழை பெய்தது.

அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்ததையடுத்து அந்த மாவட்டங்களில் ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டது.

நேற்று மழை குறைந்ததால் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் 9 மாவட்டகளில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain to nine districts in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->