மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகமாகும் மூலிகை பெட்ரோல்.. முதற்கட்டமாக எங்கு?.. ராமர் பிள்ளை பரபரப்பு பேட்டி.!!
Ramar Pillai Announce Bio Petrol Distribution at Kerala
செப்டம்பர் மாதம் பத்தாம் தேதியில் இருந்து மூலிகை பெட்ரோல், டீசல், எரிவாயு உற்பத்தியை தொடங்க உள்ளதாக ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரு லிட்டர் மூலிகைப் பெட்ரோல் ரூபாய் 39 க்கு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார். விவசாய கழிவுகள், கழிவு நீர் மற்றும் மூலிகைகளைக் கொண்டு பயோ டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை தயார் செய்வதாகவும் ராமர் பிள்ளை தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், " கேரள அரசு மூணாறு பகுதியில் ஆயிரத்து 1600 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து, அங்கு மூலிகை பெட்ரோல் உற்பத்தியை தொடங்க அனுமதி அளித்துள்ளதாகவும், வரும் பத்தாம் தேதி முதல் மூலிகை பெட்ரோல் உற்பத்தி தொடங்க இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மூலிகை பெட்ரோல் குறித்து பல தகவல்கள் பரவி வரும் நிலையில், மூலிகை பெட்ரோல் குறித்து என் மீது மத்திய புலனாய்வுத் துறை வழக்கு தொடுத்து, அதில் கெமிக்கல் இருக்கவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபித்தால், என் மீது பதியப்பட்ட வழக்கு மீது போதிய ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் விடுவித்துவிட்டது.
இந்தியா லடாக் பகுதியில் எரிபொருள் பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்திய ராணுவம் தன்னை அழைத்து சென்ற நிலையில், அங்கு சாதாரண பெட்ரோலை விட பயோடீசல் வீரியம் மிக்கது என்பதை அவர்கள் முன்னிலையிலேயே நான் நிரூபித்துள்ளேன் என்றும் கூறினார். இதனைப் போன்று கேரளாவில் உள்ள 27 இடங்களில் மூலிகை பெட்ரோல் நிலையங்கள் துவங்க உள்ளதாகவும், தமிழகத்தில் பயோ பெட்ரோல், பயோடீசல் தயாரிப்பது குறித்து முதல்வரிடம் அனுமதி கேட்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுகுறித்து அனுமதி வந்தவுடன் இதற்கான பணிகள் துவங்கும் என்றும், கேரளாவில் வரியுடன் சேர்த்து டீசல் மற்றும் பெட்ரோல் ரூபாய் 39 க்கு கொடுக்கப்படுவதாகவும், ரூபாய் 250 க்கு 16 லிட்டர் பயோ கேஸ் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இந்த பெட்ரோல் தயாரிக்கும் போது, லிட்டர் ரூ.20 க்கு விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ramar Pillai Announce Bio Petrol Distribution at Kerala