ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 27 மீனவர்கள் 5 படகுகளை இலங்கை கடற்படை எல்லை தண்டு வந்ததாக தெரிவித்து சிறை பிடித்து சென்றனர். 

இந்த சம்பவம் குறித்த அறிந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஆத்திரமடைந்த நிலையில் மீனவர்கள் சிறை பிடிப்பு தொடர்பாக இன்று மீனவர் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். 

இதனை வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 

மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகின்ற 18ம் தேதி பாம்பனில் சாலை மறியல் நடத்தப்படும் என மீனவர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameswaram fishermen decided to strike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->