இலங்கை கடற்படையினரின் அராஜகம்! ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை கண்டித்தும் இறந்தவர்களுக்கு நீதி கேட்டும், ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் வசிக்கும் 1500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வழக்கம். தொடர்ந்து எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி வழக்கம்போல் மீனவர்கள் 1500 பேர் 400க்கும் மேற்பட்ட விசை படகுகளில் வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

கடலின் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாலை வேளையில் கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்பறையினர் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர் ஆன கார்த்திகேயன் என்பவரது விசை படகின் மீது மோதி உள்ளனர்.

இதனால் படகில் இருந்து கீழே விழுந்த மலைச்சாமி, ராமச்சந்திரன், மூக்கையா உள்ளிட்ட நான்கு மீனவர்கள் கடலில் விழுந்து மாயமாகி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு  யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதில் மலைச்சாமி என்ற மீனவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக தகவல் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதநிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் சம்பவத்திற்கு நீதி கேட்டுப் போராட்டம் நடத்தினர். திடீரென போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தநிலையில் உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. இலங்கையில் வந்து கப்பல் மோதி  உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் உடலை தமிழகம் கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும் என இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameswaram fishermen strike indefinitely


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->