வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள்!
Rameswaram Fishermen withdrew their strike
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருக்கும் மீன்பிடி தொழிலில் நாள் ஒன்றுக்கு 1500-க்கும் மேற்பட்ட விசைப்பலகைகள் மூலமும் 500க்கும் மேற்பட்ட நாடுகள் மூலமும் மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர்.
அவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து மீனவர்கள் மற்றும் விசைப்பலகைகளை சிறை பிடித்து செல்கின்றனர்.
அவர்கள் சில வாரங்களில் விடுதலை செய்யப்பட்ட போதிலும் இலங்கை அரசு படகுகளை நாட்டுடைமையாக்கி விடுகிறது. இதனால் மீனவர்கள் படகு இல்லாமல் மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க சென்ற ஒரு படகு 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறை பிடித்து படகுகளை பறிமுதல் செய்தனர்.
மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என 2 நாட்கள் மீனவர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் மேற்கொண்டனர்.
இதனால் ரூ. 500 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீனவர் நலத்துறை அனுமதி பெற்று மீன் பிடிப்பதற்காக இன்று காலை கடலுக்குள் சென்றனர்.
English Summary
Rameswaram Fishermen withdrew their strike