"தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள".. ஈ.பி.எஸ் ரம்ஜான் வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தனது ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் "ஈகை திருநாளை இன்பமுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

அதிமுக ஆட்சியில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதையும் கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் அரனாக திகழும் என்பதையும் இந்த இனிய நாளில் பெருமை யோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். 

புனித நூலான திருக்குர்ஆன் அருளப்பட்ட இந்த மாதத்தில் தமிழ்நாட்டில் தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramzan greetings from EPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->