கள்ளக்குறிச்சி விவகாரம் : உயிரிழப்புக்கு காரணமான மெத்தனால் எங்கிருந்தது வந்தது என்று வெளியான தகவல்..! - Seithipunal
Seithipunal



கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 52 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் பொறுப்பை  சிபிசிஐடி அதிகாரிகளிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு மரக்காணத்தில் நடந்த கள்ளச் சாராய சாவில் தொடர்புடையதாக மரக்காணத்தைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர்.

இந்நிலையில் தற்போது கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து இவர்களிடம் தனி இடத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மெத்தனால் அதிகமாக கலந்திருப்பது தான் உயிரிழப்புக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. 

இதையடுத்து மேற்கண்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், உயிரிழப்புக்கு காரணமான இந்த மெத்தனால் ஆந்திராவின் தெலுங்கானா மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் இருந்து ரயில் மூலம் முதலில் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு செல்லப்பட்ட மெத்தனால் அங்கிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

முன்னதாக கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன் மலைப் பகுதியில் காய்ச்சப்பட்டது மூலிகை சாராயம் என்று கூறப்பட்டது. ஆனால் அதில் போதை அதிகரிப்பதற்காக மெத்தனால் அதிகளவில் கலந்து சாராயம் காய்ச்சி விற்கப் பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இந்த அளவுக்கதிகமான மெத்தனால் கலப்பு தான் இத்தனை உயிரிழப்புக்கு காரணம். இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reason Of Kallakurichi Hooch Tragedy Methanol Has Arrived From Where


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->