#சென்னை || எண்ணெய் கழிவால் பாதித்த படகுகளுக்கு நிவாரணம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையின் போது சிபிசிஎல் பெட்ரோலிய ஆலையிலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவு எண்ணூர் கடல், கொசத்தலை ஆற்றில் கலந்து வெளியறியது. இதனால் எண்ணூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 22 மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் பாதித்த பகுதிக்கு சிறப்பு நிவாரணம் அறிவிக்கப்படாததால் பொது மக்களும் மீனவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சிறப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 12,500 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டதால் தாழங்குப்பம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த அறிவிப்பால் 22 மீனவ கிராமங்களில் 2300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 700 படகுகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு வெள்ளம் பாதித்த மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

relief for boats affected by oil spill in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->