தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: மன்னிப்பு கோரிய டிடி தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம்! - Seithipunal
Seithipunal


சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 'ஹிந்தி மாத' நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி படப்படாமல் விடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை விவகாரத்தில் டிடி தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் மன்னிப்பு கோரி உள்ளது.

இதுகுறித்த அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வார்த்தை விடுபட்டதற்காக மன்னிப்பு கோருகிறோம்.

தமிழையோ, தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் நோக்கம், அதை பாடியவர்களுக்கு துளியும் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Rn ravi Tamil thai Valthu DD Tamil


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->