பிரபல காமெடி நடிகர் வீட்டில் கொள்ளை.! - Seithipunal
Seithipunal


சென்னை வடபழனி அழகர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு சீசன்-9' என்ற காமெடி நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்று பிரபலமானவர். அதன் பின்னர் அவர் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், ஜெயச்சந்திரன் நேற்று இரவு வீட்டு கதவை திறந்து வைத்து வீட்டு தூங்கியுள்ளார். அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான லேப்டாப் மற்றும் செல்போனை‌ திருடிச் சென்றுள்ளனர். 

இதையடுத்து, காலையில் எழுந்து பார்த்த ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்து லேப்டாப், செல்போன் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

robbery in actor jeyachandran house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->