பத்திரபதிவு கட்டண உயர்வை உடனே திரும்ப பெறுக - ஜி.கே வாசன்!!
Roll back bond registration fee hike immediately GK Vasan
தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியள்ளதாவது,
தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் மீது பொருளாதாரச் சுமை கூடியுள்ளது.தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் மக்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றி வருவது நியாயமில்லை.
ஏற்கனவே மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என்று நடைமுறைப்படுத்தி வருவதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழக அரசு பத்திரப்பதிவில் உயர்த்திய கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறிவுள்ளார்.
English Summary
Roll back bond registration fee hike immediately GK Vasan