பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு!
Rowdy hacked death in Kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் பல்லவர்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் திடீரென இவரை வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக காஞ்சிபுரம் எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு மர்ம குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Rowdy hacked death in Kanchipuram