கஞ்சாவுடன் உலா வந்த வாலிபர் - நெல்லையில் கைது.!
man arrested for sales kanja in tirunelveli
1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சத்திய வாகீஸ்வரர் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர் சிங்கிகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் சோதனை நடத்தியதில், அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for sales kanja in tirunelveli