விஜய் பேச்சில் தெளிவற்ற தன்மை தான் உள்ளது - தமிழிசை சவுந்தர்ராஜன்.!
tamilisai soundarrajan speech about tvk leader vijay
ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் கட்சியில் அடிப்படையில் மக்களுக்காக தீவிரமாக பணியாற்றி தான் முன்னால் வந்தார்கள் என்று பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மணப்பாக்கத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:-
"பாஜக இரண்டாவது, மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளது என்று ஏளனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2026 உங்கள் கூட்டணி கட்சிகள் இரண்டு, மூன்றாக பிரிந்து விடும் போலிருக்கிறது. விஜய் ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் திமுகவிற்கும் தவெகவிற்கும்தான் போட்டி என எதுகை மோனையில் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஆனால் நீங்கள் எதிரிலேயே இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவும் சரி, எம்ஜிஆரும் சரி கட்சியில் அடிப்படையில் மக்களுக்காக தீவிரமாக பணியாற்றி தான் முன்னால் வந்தார்கள். ஆனால் விஜய் அவராகவே கற்பனை செய்து கொண்டு பேசுகிறார்.
தம்பி விஜய் அவர்களே எதுகை, மோனைக்கு வேண்டுமானால் நீங்கள் பேசுவது சரியாக இருக்கும். அவர் முதலில் திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். விஜய்யின் படம் தெலுங்கில் டப்பிங் ஆகிறது, பிற மாநிலங்களில் ஓகோ என ஓடுகிறது படத்திற்கு பல மொழி வேண்டும். ஆனால் பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா..?
அப்பொழுது விரிவுபடுத்தப்பட்ட வாழ்க்கையில் உங்களுக்கு பல மொழிகள் தேவைப்படும் பொழுது, இதேபோல விரிவுபடுத்தப்பட்ட சவால்களில் குழந்தைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் படத்திற்கு மட்டும் பல மொழி வேண்டும் பாடத்திற்கு பல மொழி வேண்டாம் என்று சொன்னால் எப்படி? களத்தில் விஜய் எதிரில் இல்லை.
விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மை தான் உள்ளது. திமுக இருமொழிக் கொள்கை சொல்கிறது, நாமும் இருமுடி கொள்கையை செல்வோம். வக்பு சட்டத் திருத்தத்துக்கு திமுக எதிர்ப்பு சொல்கிறார்களா? அப்போ நாமும் எதிர்ப்பு சொல்லி விடுவோம். பல நகராட்சிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாயத்துகளை கீழே தள்ளிவிட்டு சாமானிய மக்கள் சின்னம் இல்லாமல் போட்டி போடுவதை தடுத்துவிட்டு ஒரு கட்சி சார்ந்த நகராட்சி அமைப்பாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tamilisai soundarrajan speech about tvk leader vijay