ரூ. 11 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்..எதிர்க்கட்சித் தலைவர் திறந்து வைத்தார்!
Rs. 100 New water treatment plant at a cost of Rs 11 lakh The Leader of the Opposition inaugurated
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, கொம்பாக்கம் மாதா கோவில் வீதியில் புதிதாக ரூ. 11 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா திறந்து வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, கொம்பாக்கம் மாதா கோவில் வீதியில், புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் ரூ. 11 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தார். இதன் மூலம் கொம்பாக்கம் மாதா கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பயன்பெறுவார்கள்.
இதில், தலைமைப் பொறியாளர் முனைவர் தீனதயாளன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணியன், செயற்பொறியாளர் உமாபதி, உதவிப் பொறியாளர் அன்பரசன், இளநிலைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செல்வநாயகம், பேராசிரியர் அம்லர், கதிரவன், அருள்மணி, சேகர், அந்தோணி, உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
English Summary
Rs. 100 New water treatment plant at a cost of Rs 11 lakh The Leader of the Opposition inaugurated