அண்ணாமலை வேடிக்கைக் காட்ட தான் சாட்டையால் அடித்துக்கொள்கிறார் - ஆர்.எஸ்.பாரதி..!
rs bharathi speech about annamalai sattai slape issue
கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டார். இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளதாவது.
"அண்ணாமலையின் போராட்டம் கேலிக்கூத்தாக உள்ளது. இதை பா.ஜ.க.வில் இருப்பவர்களே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன். பகுத்தறிவிற்கு ஒவ்வாத ஒரு போராட்டத்தை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார்.
பதவி பறிபோகும் என யாரோ கூறியதால் அண்ணாமலை சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார். வேடிக்கை காட்டுவதற்காக அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொள்கிறார். அவருக்கு வயது இருக்கிறது. என்னை போன்றோர் அடித்து கொள்ள இயலுமா?
பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது அண்ணாமலைக்கு சாட்டை கிடைக்கவில்லையா? அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தவில்லை. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒரு மணிநேரத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் தரப்பில் இருந்து, திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் இனி செருப்பு அணிய முடியாது என்று அவர் தெரிவித்தார்.
English Summary
rs bharathi speech about annamalai sattai slape issue