நேர்மையான தேர்தல் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு... சமூக வலைதளத்தில் வைரலாகும் புகைப்படம்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அத்தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அத்தொகுதி வாக்காளர் பெரு மக்களை திமுக பண மழையில் நனைய வைத்துள்ளனர்.

தினமும் காலை முதல் மாலை வரை மூன்று வேளையும் கறி விருந்துடன் ரூ.500, பொழுதுபோக்குக்காக பாட்டு கச்சேரி, கரகாட்டம், புதிய திரைப்படம் என பல்வேறு சலுகைகளை திமுக வழங்கி வருகிறது. ஆண் வாக்காளர்களுக்கு தினமும் மது பாட்டில்கள் வழங்கப்பட்டது. மேலும் வாக்காளர் பெருமக்களுக்கு பட்டுப்புடவை, குக்கர், வெள்ளி கொலுசு, காமாட்சி விளக்கு, ஸ்மார்ட் வாட்ச் போன்ற எண்ணற்ற பரிசுகளை திமுகவினர் வழங்கி வருகின்றனர். 

இது தவிர வாக்காளர்களுக்கு பணம் வழங்கவும் அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து பல புகார்கள் அளித்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆளுங்கட்சியினரின் அழுத்தத்தால் கண்டு கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா நடத்தப் போவதாக ராஜேஷ் கண்ணன் என்பவர் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில் "ஒரு கோடி பரிசு மற்றும் பாராட்டு விழா.! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுத்து தண்டனை பெற்று தரும் நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு விழா..!!" எனக் குறிப்பிட்டு பரிசு மற்றும் பாராட்டு விழா நடைபெறும் நாள் மற்றும் இடத்தை அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாளாக 25.02.2023 என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மையை விமர்சனம் செய்யும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs1 crore prize and felicitation ceremony for honest election officer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->