அடுத்த மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000.. தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் பொழுது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதனைத் தொடர்ந்து ஆட்சி காட்டிலில் அமர்ந்த திமுக பெண்களுக்கான உரிமை தொகை வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக அரசு சார்பில் மாநிலத்தின் நிதிநிலை சரி செய்த பிறகு குடும்ப தலைவர்களுக்கான உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கான உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பிற்காக பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களிடமிருந்தும் வங்கி கணக்கு எண் பெறப்பட்டது. வங்கி கணக்கு இல்லாத மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூட்டுறவு வங்கி மூலம் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs1000 scheme for family heads in the TNgovt budget


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->