மணல் குவாரி முறைகேடு || அமலாக்கத்துறை சோதனையில் ₹ 15 கோடி பறிமுதல்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மணல் கடத்தல், மணல் குவாரிகளில் முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் மற்றும் புகார்கள் அடிப்படையில் கடந்த 4 நாட்களாக நடைபெற்ற அனைத்து அமலாக்கத் துறை சோதனை நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ₨15 கோடி பணத்தை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ஒரு கிலோ தங்கம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமரக்கத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு தொடர்பாக சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. கனிமவளத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs15 crore seized in EDraids in TamilNadu in last 4days


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->