பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.2000 அபராதம்..! - Seithipunal
Seithipunal


மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில், திருப்பூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிலையில், அவிநாசி சாலை, ஆஷா் நகா், தாராபுரம் சாலை, பி.என்.சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 14 அசைவ உணவகங்கள், 9 பேக்கரிகள், 21 தள்ளுவண்டிகளில் ஆய்வு நடத்தியதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய மூன்று கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மேலும் கெட்டுப்போன கோழி இறைச்சி 4 கிலோ, சாயமேற்றப்பட்ட கோழி இறைச்சி 3 கிலோ ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.இதுமட்டுமின்றி, சுகாதாரமில்லாமல் செயல்பட்ட 4 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rs.2000 fine for shops using plastic bags


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->