கருவில் இருப்பது ஆணா? பெண்ணா?! கருக்கலைப்பு ரூ.13 ஆயிரம்! தருமபுரியை அதிரவைத்த சம்பவம்!
running an illegal abortion center were arrested
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வாடகை வீட்டில் சட்டவிரோதமாக கருகலைப்பு மையம் நடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நல்லம்பள்ளி தாலுகாவில் நெல்குந்தி என்ற மலைப்பகுதியில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வந்துள்ளது. அங்கு பெண் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை சொல்வதை வழக்கமாக வைத்து பணம் சம்பாதிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, மாவட்ட நலப்பணி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் காலை முதல் அவர்களை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது கள்ளக்குறிச்சியை சேர்ந்த முருகேசன் என்பவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். வாடகை வீட்டில் சட்ட விரோதமாக கருகலைப்பு செய்வதை வாடகையாக கொண்டுள்ளார்.
இவர் ஏற்கனவே கைதான நிலையில் ஜாமினில் வெளியே வந்து தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. கர்ப்பிணி பெண்களை வரவைத்து அவர்களுக்கு ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா? பெண் குழந்தையா என்று கூறி அவற்றை கருகலைப்பு செய்ததும் தெரியவந்துள்ளது.
ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.13 ஆயிரம் வரை வசூலித்ததாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து முருகேசன் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
running an illegal abortion center were arrested