நெல்லையில் சிறுநீர், மலம் கழித்தால் ரூ.500!...இன்று முதல் அமல்!
Rupees 500 if you urinate or defecate in paddy effective from today
பொது இடங்களில் இன்று முதல் சிறுநீர், மலம் கழித்தால் ரூ100 முதல் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் என்று அரசு மற்றும் தனியார் அமைப்புகள் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை மாவட்ட பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர், மலம் கழித்தால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட நாங்குநேரி மற்றும் வடக்கு வள்ளியூர் பேரூராட்சியில் முதற்கட்டமாக இன்று முதல் இவை அமலுக்கு வந்துள்ளது. மேலும், பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 100 ரூபாயும், திறந்தவெளியில் மலம் கழித்தால் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தனிநபர் கழிப்பிடத்தையோ அல்லது பொது கழிப்பிடத்தையோ பொதுமக்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அந்த பகுதியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Rupees 500 if you urinate or defecate in paddy effective from today