மேடையை மிரளவிட்ட வேலுமணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


மேடையை மிரளவிட்ட வேலுமணி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

மதுரையில் இன்று அதிமுக சார்பில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் பிரமாண்ட மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், மாவட்டச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் என்று ஏராளமானோர் குவிந்துள்ளனர். 

இந்த மாநாட்டின் நுழைவு வாயிலில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆள் உயர பிரமாண்ட உருவ கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதன் படி இன்று காலை 8.30 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயரகொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். 

இதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தலைமையில் பட்டிமன்றம், செந்தில், ராஜலெட்சுமி தம்பதியின் கிராமிய பாடல் கலைநிகழ்ச்சி, ராமர் மற்றும் ரோபோ சங்கரின் நகைச்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த கோவை அம்மா ஒயிலாட்ட கலைக்குழுவினர் 'எடப்பாடியார் மானமுள்ள தமிழன்' என்ற பாடலுக்கும் ‘எங்க ஊரு கோவை ஜில்லா தில்லாலே தாலோ’ என்ற பாடலுக்கும் நடனமாடி உற்சாகப்படுத்தினர். அவர்களுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடனமாடி அசத்தினார். 

ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு ஒயிலாட்டம் ஆடும் வீடியோக்கள் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

s p velumani dance madurai meeting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->