திருச்செந்தூர் முருகனை காணச்செல்லும் ஸ்டாலின் மருமகன் சபரீசன்.! வேஷ்ட்டி, துண்டுடன்.. வைரல் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


என்னதான் திராவிடம், கடவுள் மறுப்புக் கொள்கை என்று திமுக பேசிய போதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி கூட அந்த கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் எப்படி கோவில் கோவிலாக சென்று வழிபடுகிறாரோ அதுபோல அவரது குடும்பத்தினருக்கும் மற்றவர்களும் கடவுள் பக்தி மிக்கவர்களாகவே இருக்கின்றனர்.

ஸ்டாலின் குடும்பத்திற்கு மிக நெருங்கியவர்கள் யாராவது கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் போது இது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனங்களுக்கு ஆளாவது வழக்கம். 

அந்த வகையில் தற்போது ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய செல்லும் சபரீசன் வேஷ்டி மற்றும் துண்டு மட்டும் அணிந்தபடி மேலாடை இல்லாமல் சன்னதிக்கு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது மிகுந்த விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabareesan In thiruchendhur Temple Video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->