தமிழகம்: ஏரிக்கரை உடையும் அபாயம்! முக்கிய நெடுஞ்சாலை மூடல்! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பண்ணப்பட்டி ஏரிக்கரை உடையும் தருவாயில் இருப்பதால், நெடுஞ்சாலை பாதை மூடப்பட்டுள்ளது.

பெங்களூரு சேலம் செல்லக்கூடிய வழியில் பண்ணப்பட்டி ஏரியின் புதிய கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக ஏரியின் ஓரமாக உள்ள பெங்களூரில் இருந்து சேலம் செல்லக்கூடிய நெடுஞ்சாலையின் ஒரு பாதை தற்போது மூடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணமாகவே இந்த பாதை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவிக்கையில், "அக்.15,16 &17 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயாராக உள்ளனர். பால், குடிநீர், உள்ளிட்ட உணவுப் பொருட்களை மழைக்கு முன்பாகவே தயாராக வைக்க அறிவுறித்தியுள்ளோம்.

பொதுமக்களுக்கு உதவ தமிழ்நாடு முழுவதும் 60,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீர்வளத்துறை மூலம் நீர் நிலைகளை கவனித்து வருகிறோம். 

மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் பொதுமக்களும் எந்த நேரமும் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem pannapatti yerikarai warn NH closed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->