சேலம் மது போதையில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி - அரங்கேறிய பெருங்கடூரம்! - Seithipunal
Seithipunal


சேலம், அழகாபுரம் அருகே மது போதையில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி பாலில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட முயற்சி நடந்ததாக தெரியவந்துள்ளது. 

சேலம், அழகாபுரம் சிக்னல் அருகே மது போதையில் பதினொன்றாம் வகுப்பு படிக்கக்கூடிய பள்ளி மாணவி மயங்கிடந்து உள்ளார்.

இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை முடிந்து மாணவியிடம் விசாரணை நடத்தியதில், மாணவிக்கு பாலில் வன்கொடுமை முயற்சி அரங்கேறி இருப்பது தெரிய வந்தது.

மேலும் பள்ளி விடுமுறை நாளில் இரும்பு கடை ஒன்றில் பள்ளி மாணவி பணிபுரிந்து வந்ததாகவும், அப்போது அந்த இரும்பு கடையின் முதலாளி கோவிந்தசாமி என்பவர், மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து காட்டு பதிக்கு தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

அப்போது மாணவிக்கு வலிப்பு ஏற்படவே, இதனால் பயந்து போன இரும்பு வியாபாரி கோவிந்தசாமி, மாணவியை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து சேலம் அழகாபுரம் சிக்னல் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. 

இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், கோவிந்தசாமி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem school girl abuse case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->