திருட போன இடத்தில், மெய் மறந்து அடுத்தவர் மனைவியை ரசித்து.. போலீசில் சிக்கிய கொள்ளையன்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு அருகில் சூரமங்கலம் பகுதியில் ஒரு அழகிய பெண் இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாத காரணத்தால் தங்களது வீட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டு உறங்கினார். காற்று வரவில்லை என்று திடீரென்று அவருக்கு விழிப்பு ஏற்பட்டது. 

அப்போது, யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல உணர்ந்த அவர் பின்னர் சுதாரித்துக்கொண்டு திருடன் திருடன் என்று கத்திக் கூச்சலிட்டு இருக்கிறார். உடனே அந்தத் திருடன் வீட்டிலிருந்து வெளியே சென்று தப்பிக்க முயன்றுள்ளார். அப்பொழுது அந்த திருடன பெண்ணின் கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மடக்கிப்பிடித்து அடிக்க ஆரம்பித்தனர்.

 அப்போது வலிப்பு வந்தது போல அந்தத் திருடன் தப்பிக்க முயன்று இருக்கிறார். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் திருடச் சென்ற போது அந்த பெண் மிகவும் அழகாக இருந்ததால் அவரை ரசித்து கொண்டிருந்ததாகவும் அப்போது அந்த பெண் கண்விழித்து விட்டதாகவும் திருடன் வாக்குமூலம் அளித்துள்ளான். இதனை தொடர்ந்து போலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Salem thief caught by police


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->